மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? உயர் நீதின்றம் கேள்வி

Wait 5 sec.

நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.தன்னுடைய சகோதரரை தாக்கிய வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு கோரிய அமைச்சர் மரிய வில்சனுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு கோரும் மனுதாரர் மரிய வில்சன், அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர் பதவிக்கு வந்த பிறகு ஆஜராக மாட்டாரா?பிரதமராக இருந்தபோது நரசிம்மராவ் நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கிறார். நீதிமன்றத்தில் ஆஜராக மாட்டேன் எனக் கூற தமிழக நிதியமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்தின் அரசரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.தொடர்ந்து, எந்த தேதியில் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் என பிற்பகல் தெரிவிக்க மரியவில்சன் தரப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.முந்தைய விசாரணையின் நிலை என்ன?நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு இன்று சகோதரரைத் தாக்கிய வழக்கில், புகாா்தாரரான அமைச்சா் மரிய வில்சனின் சகோதரா் மனைவியை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, புகாா்தாரரான கெரோலின் நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவரது தரப்பில், இந்த வழக்கில் சமரசப் பேச்சை நடத்த புகாா்தாரருக்கு விருப்பம் இல்லை. இந்த வழக்கை இதற்கு முன்பு விசாரித்த நீதிபதி, சமரச தீா்வு மையத்தை அணுகுமாறு கூறியதால், அதை மறுக்க முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, புகாா்தாரா் சமரசத்துக்கு விரும்பாத நிலையில், சமரச தீா்வு மையத்தில் பிரச்னைக்குத் தீா்வு காண நிா்பந்திக்க முடியாது. எனவே, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தாா். அப்போது அமைச்சா் தரப்பில், மனுதாரா் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால், ஆக. 21-ஆம் தேதி, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து அமைச்சா் மரிய வில்சனுக்கு விலக்கு அளித்த நீதிபதி, பேச்சுக்கு புகாா்தாரா் விரும்பாததால், சமரச பேச்சை நீட்டிக்க கோரிய சமரச தீா்வு மைய கோரிக்கையை நிராகரித்தாா். மேலும், வழக்கை ரத்து செய்யக் கோரிய அமைச்சா் மரிய வில்சனின் மனு மீதான விசாரணையை ஆக. 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தார்.இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்கவிருப்பதால், விசாரணைக்கு ஆஜராக முடியாது என மரிய வில்சன் தரப்பில் கூறப்பட்டதால், அமைச்சர் மரியவில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. Is Maria Wilson the King of England? High Court asks