திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படவில்லை என தவெக எம்எல்ஏ முஸ்தபா என்னும் மதார் பதுருதீன் பேசியதற்கு திமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேரவையில் சிறுபான்மையினர் நலம் குறித்து பேசிய தவெக உறுப்பினர் முஸ்தஃபா, "அதிமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு பல விஷயங்களைச் செய்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு 3.5% இடஒதுக்கீதிலிருந்து உயர்த்தி தருகிறோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த திமுக, அதனைச் செய்யவில்லை. நாங்கள் 10 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டோம், உயர்த்தி தருகிறோம் என்று சொன்னார்கள், ஆனால் செய்யவில்லை" என்று கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். தவெக எம்எல்ஏவை கண்டித்து அவரை அமரும்படி பேரவைத் தலைவர் கூறினார். இதன்பின்னர் பேசிய பேரவைத் தலைவர், "இதுவரை தமிழகத்தை ஆட்சி செய்த திமுக, அதிமுக செய்தவற்றை சொல்ல அனுமதி அளித்தேன். இன்னொரு முக்கியமான விஷயத்தை விட்டுவிட்டார்கள். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 'ஹஜ் பயணத்திற்கு நிறைய செய்கிறீர்கள். கிறிஸ்தவர்கள் புனித பயணம் செல்வதற்கு ஏன் செய்வதில்லை?' என்று அவரிடம் கேட்டேன். உடனடியாக அவர் வீட்டிலேயே கிறிஸ்துமஸ் விழா நடத்தச் சொல்லி கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்வதற்கு 500 பேருக்கு தலா ரூ. 20,000 கொடுத்தார். முந்தைய ஆட்சியைவிட இந்த ஆட்சியில் சிறுபான்மையினருக்கு செய்யவிருப்பதாக அமைச்சர் கூறுகிறார்" என்றார். Jayalalithaa provided financial assistance for Christians to undertake a pilgrimage: Assembly Speakerசெம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம்: பணி ஆணையை ரத்து செய்தது தவெக அரசு!