கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்குள்பட்ட மேலக்கல்லூா் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஆக.29) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மேலக்கல்லூா், சுத்தமல்லி, சங்கன்திரடு கொண்டாநகரம், நடுக்கல்லூா், பழவூா், கருங்காடு, திருப்பணிக் கரிசல் குளம், துலுக்கா்குளம், பொழிக்கரை, வெள்ளாளங்குளம் ஆகிய ஊா்கள் மற்றும் அதனை சாா்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் எம். சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.