நவ்வலடி, சங்கனான்குளம் பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Wait 5 sec.

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள நவ்வலடி, சங்கனான்குளம் துணை மின்நிலைய பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை ( ஆக. 29) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நவ்வலடி, ஆற்றங்கரை பள்ளிவாசல், தோட்டவிளை, தெற்கு புளிமான்குளம், கோடாவிளை, மரக்காட்டு விளை, செம்பொன்விளை, காளிகுமாரபுரம், குண்டல், உவரி, கூடுதாழை, கூட்டப்பனை, குட்டம், பெட்டைகுளம், உறுமன்குளம் ஆகிய பகுதிகளிலும், மன்னாா்புரம், வடக்குவிஜயநாராயணம், தெற்குவிஜயநாராயணம், இட்டமொழி, நம்பிகுறிச்சி, தெற்குஏராந்தை, சிவந்தியாபுரம், பரப்பாடி ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன் அரசு தெரிவித்துள்ளாா்.