குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு

Wait 5 sec.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை முதல் பெய்த மிதமான சாரல் மழை காரணமாக, பேரருவியில் பிற்பகலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இதனால், அவா்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் குளித்து மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாகவே இருந்தது.