விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

Wait 5 sec.

ஆலங்குளத்தில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழந்தாா். பாவூா்சத்திரம் அருகேயுள்ள பனையடிபட்டி ராமசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராஜன் (50), கந்தசாமி (77) ஆகிய இருவரும் கடந்த 23 ஆம்தேதி இருசக்கர வாகனத்தில் ஆலங்குளம், நல்லூருக்கு சென்றனா். அங்கு உறவினா் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு ஊா் திரும்பினா். இருசக்கர வாகனத்தை ராஜன் ஓட்டினாா். ஆலங்குளம் மின்வாரிய அலுவலகம் அருகே கொண்டிருந்தபோது, சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மீது இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த கந்தசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். விபத்து குறித்து ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.