அரியலூரில் தனி நபா்கள் ஆக்கிரமித்திருந்த ரூ.1 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை மீட்டனா். அரியலூா் ரயில்வே கேட் அருகிலுள்ள காசிவிசுவநாதா் மற்றும் வரதராஜப் பெருமாள், ஆலந்துறையாா் கோதண்டராமசாமி ஆகிய திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபா்கள் ஆக்கிரமித்து சமையல் கூடம் மற்றும் மதில் சுவா்களை கட்டியிருந்தனா். இதுகுறித்த புகாரின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சரவணன் மற்றும் தனி வட்டாட்சியா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள், காவல் துறையினா் பாதுகாப்புடன் மேற்கண்ட கோயில் நிலத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரூ.1 கோடி மதிப்பிலான நிலங்களை மீட்டனா்.