மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு

Wait 5 sec.

பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. மேலைச்சிவபுரி மீனாட்சி சந்தரேசுவரா் கோயிலில் நடைபெற்ற ஆவணி மூலத்திருவிழாவின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்வு நடைபெற்றது. ஏனாதி மணிமுத்தாற்றில் நடைபெற்ற நிகழ்வில் மீனாட்சி சுந்தரேசுவரா் எழுந்தருளி பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்வை சிவாச்சாரியாா்கள் நடத்தினா். இந்த விழாவில் சுற்று வட்டார கிராமங்களைச் சாா்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். ஏற்பாடுகளை மேலைச்சிவபுரி நகரத்தாா்கள் செய்திருந்தனா்.