மண்ணின் மணத்தோடு ஒரு சுவாரஸ்யமான படைப்பு! - மொத ராத்திரி படத்தைப் பாராட்டிய சிம்பு!

Wait 5 sec.

நடிகர்கள் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா நடிப்பில் வெளியான “மொத ராத்திரி” திரைப்படத்தை நடிகர் சிலம்பரசன் பாராட்டியுள்ளார். நடிகர் ரிஷிகாந்த் நாயகனாக நடித்து, அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகி வெளியான புதிய படம் “மொத ராத்திரி”. புதிதாகத் திருமணமான ஜோடியின் முதலிரவில் நடக்கும் நகைச்சுவையான கதைகளத்துடன் உருவான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில், மண்ணின் மணத்தோடு கூடிய ஒரு சுவாரஸ்யமான படைப்பு எனக் கூறி மொத ராத்திரி படத்தை நடிகர் சிலம்பரசன் இன்று (ஆக. 28) பாராட்டியுள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,“மொத ராத்திரி படத்தைப் பார்த்தேன், மிகவும் ரசித்தேன்.பிற மொழிகளில் வெளியாகும் சிறிய, அழகான படங்களைக் கண்டறிந்து நாம் கொண்டாடுகிறோம். அதேபோல, ஒரு புதிய குழுவுடன் புதிய முயற்சியாக ஒரு தமிழ்ப் படம் வெளியாகையில் அதற்கும் நாம் அதே அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஒரு கிராமத்துத் திருமணப் பின்னணியைக் கொண்டு, ஒரே இரவில் நடக்கும் கதை. இதில் வரும் பல கதாபாத்திரங்களும், சிறிய தருணங்களும் மிகவும் இயல்பானவையாக அமைந்திருக்கின்றன. கதைகளம், நகைச்சுவை, மனிதர்கள் இடையேயான உரையாடல்கள் மற்றும் கதாபாத்திரங்களின் சித்தரிப்பு என அனைத்தும் மிகவும் சிறப்பாகக் கையாளப்பட்டிருந்தன. ஒரு புதிய இயக்குநரும் அவரின் குழுவும், மண்ணின் மணத்தோடு கூடிய சுவாரஸ்யமான ஒரு படைப்பை உருவாக்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்குநர் ராஜா கருப்பசாமி, நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்; இவர்களுடன், இப்படத்துக்குத் துணையாக நின்ற அனைவருக்கும் எனது பாராட்டுகள்.என் ரசிகர்கள் மற்றும் சினிமாவை விரும்புபவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்; மொத ராத்திரி திரைப்படத்தைத் திரையரங்குகளில் சென்று பார்த்து, அக்குழுவுக்கு ஆதரவு அளியுங்கள்.முழு படக்குழுவுக்கும் எனது வாழ்த்துகள். தொடர்ந்து நல்ல படங்களை உருவாக்குங்கள்” எனக் கூறியுள்ளார்.ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2! 5 ஆவது பாடல் வெளியானது!Actor Silambarasan has praised the film "Modha Rathiri," starring Rishikanth and Anishma.