டிஎன்பிஎல் இறுதிப்போட்டி: சித்தார்த் அதிரடி; மதுரை பேந்தர்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!

Wait 5 sec.

டிஎன்பில் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணிக்கு எதிராக முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.சென்னை சேப்பாக்கம் திடலில் நடைபெற்று வரும் டிஎன்பிஎல் இறுதிப்போட்டியில் மதுரை பேந்தர்ஸ் மற்றும் கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கோவை கிங்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.ஆண்ட்ரே சித்தார்த் அதிரடி; மதுரை பேந்தர்ஸுக்கு 183 ரன்கள் இலக்கு!டாஸ் வென்று முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ஆண்ட்ரே சித்தார்த் 47 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, பாலசுப்ரமணியம் சச்சின் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ராதாகிருஷ்ணன் மற்றும் மாதவ பிரசாத் தலா 13 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.மதுரை பேந்தர்ஸ் தரப்பில் பி.சரவணன் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குர்ஜப்நீத் சிங் மற்றும் சோயப் கான் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மதுரை பேந்தர்ஸ் அணி விளையாடி வருகிறது.Batting first against the Madurai Panthers in the TNPL final, the Kovai Kings scored 182 runs for the loss of 7 wickets.கிரிக்கெட் பேட் வாங்கக்கூட கையில் பணமில்லாத சோனல் தினுஷா; சாதனை படைத்தது எப்படி?