நரேந்திர மோடி மீன் சந்தை: பெயர்ப்பலகை அகற்றம்!

Wait 5 sec.

குஜராத்தின் சூரத் நகரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மீன் சந்தைக்கு ‘ஸ்ரீ நரேந்திர மோடி மொத்த மீன் சந்தை’ என பெயர் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூரத்தின் நான்புரா லக்கோட் பகுதியில் ரூ. 3.90 கோடி செலவில் சமீபத்தில் இந்த மீன் சந்தை கட்டப்பட்டது. அந்த மீன் சந்தைக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை அங்குள்ள சிலர் வைத்துள்ளனர். மீன் சந்தையில் வைக்கப்பட்ட பெயர்ப் பலகையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தீவிர சைவ உணவாளர் என்பதால், அவரது பெயரை அசைவ மீன் விற்பனை சந்தைக்கு வைப்பது பொருத்தமானதல்ல என்றும், இது அவரது பெயருக்கு களங்கள் விளைவிப்பதாகவும் மீன் வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சுரேந்திர லஸ்கரி எதிர்ப்பு தெரிவித்தார். அதேநேரம், இந்தச் சந்தைக்கு பாரம்பரியமாக மீன் விற்பனை தொழிலில் ஈடுபட்டு வரும் 'கஹார் மாச்சி' சமூகத்தின் பெயரை வைக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.இதுபற்றி, சூரத் மீன் வியாபாரிகள் சங்கத் தலைவட் கல்பேஷ் நவ்சாரிவாலா, “பிரதமர் மீன்வளத்துறைக்கெனத் தனி அமைச்சகத்தை உருவாக்கினார். பிரதம மந்திரி மத்சய சம்பதா யோஜனா' போன்ற மீனவர்களுக்கு உதவும் திட்டங்களை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே, அவரது பெயரைச் சந்தைக்கு வைப்பதில் தவறில்லை” என்று அவர் தெரிவித்தார்.பெயர்ப்பலகை அகற்றம்:மீன் சந்தைக்கு பிரதமரின் பெயர் வைப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என்பதால் பெயர்ப் பலகையை அகற்ற அதிகாரிகள் அங்கு சென்றனர். சூரத் மாநகராட்சியால் கட்டப்பட்ட பொதுச் சொத்திற்குப் பெயரிட வேண்டுமென்றால், நகராட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஆனால், மீன் சந்தைக்குப் பெயரிடுவது தொடர்பாக எந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், பெயர்ப் பலகையைத் தாங்களாகவே அகற்றிவிடுவதாக அதிகாரிகளிடம் வியாபாரிகள் உறுதியளித்ததால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.Naming a fish market in Gujarat after Prime Minister Narendra Modi has sparked a controversy.பின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டு