டிக்கெட் முன்பதிவில் சாதனை: இருமுடி கட்டு படத்தின் முதல் வார வசூல்!

Wait 5 sec.

நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிப்பில் இருமுடி கட்டு படத்தின் முதல் வார வசூல் சாதனை பட்டியலில் இணைந்துள்ளது. இதுவரை, ரூ.135 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஷிவ நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜா, பிரியா பவானி ஷங்கர், பேபி நக்‌ஷத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இருமுடி (தமிழில் இருமுடி கட்டு) திரைப்படம் கடந்த ஆக.21ஆம் தேதி வெளியானது.இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். வில்லாதி வில்லனே என்ற சாமி பாடல் திரையரங்குகளில் மிகுந்த கவனம் பெற்றது. வழக்கமான மாஸ் மசாலா கலந்த ரவி தேஜா படமாக அல்லாமல் சிறு கிராமத்து குழந்தைகளின் பாலியல் சீண்டல்கள் குறித்து உணர்சிகரமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் முதல்வார இறுதியில் ரூ.135 கோடி வசூலித்துள்ளது. இதுவரை 55 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு மட்டுமே செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. திருவிழா அல்லாத சமயத்தில் வெளியாகி திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளில் அதிகமாக புக்மைஷோவில் முன்பதிவு செய்யப்பட்ட உள்ளூர் படமாக இருமுடி சாதனை படைத்துள்ளதென படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. HEART WINNING BLOCKBUSTER #Irumudi grosses 135 CRORES WORLDWIDE in its first week ❤‍A massive sensation at the box office with families owning the film Book Your Tickets Now! ️https://t.co/LPeVCIRYVl#IRUMUDI / #IRUMUDIKATTU pic.twitter.com/384VGPvfEL— Mythri Movie Makers (@MythriOfficial) August 28, 2026HEART WINNING BLOCKBUSTER #Irumudi is dominanting the box office on weekdays ❤‍Highest number of tickets sold on BookMyShow for a regional film Book Your Tickets Now! ️https://t.co/LPeVCIRYVl#IRUMUDI / #IRUMUDIKATTU pic.twitter.com/GIO0dNtc8P— Mythri Movie Makers (@MythriOfficial) August 27, 2026கூச்சலிடுவதால் வருவது எனது பலம் அல்ல... டாக்ஸிக் பட கதாபாத்திரத்துக்கு நயன்தாரா பெருமிதம்!5.5 million tickets sold: 'Irumudi Kattu' movie's astonishing first-week box office collection!