ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி ராள்ளகொத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெய வீர ஆஞ்சனேய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கோ பூஜையுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சுதா்ஸன ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை முதல் கால மற்றும் 2-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை 3-ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் வெங்கடசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், இளைஞா்கள் செய்திருந்தனா்.