மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு திரிபுரா மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் இருந்து 1,305 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.திரிபுராவில் சனிக்கிழமை இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக, ஹவுரா மற்றும் கதாகால் நதிக்கரையில் அமைந்துள்ள பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. இதுவரை 413 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 1,305 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 17 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்டாகால், ஸ்ரீலங்காபஸ்தி, கதாகால் மற்றும் பம்புடியாவின் ஒரு பகுதி ஆகியவை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. முதல்வர் மாணிக் சாஹா, ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகள் மற்றும் நிவாரண முகாம்களைப் பார்வையிட்டு நிலைமையை ஆய்வு செய்தார். வெள்ளப் பிரச்னைக்கு அரசு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பார்முரா மலையில் பெய்த கனமழை காரணமாக மேற்கு திரிபுரா மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திடீர் வெள்ளத்தைத் தடுக்க கரைகளும் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இயற்கையின் சீற்றத்தை நம்மால் தடுக்க முடியவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றார். At least 1,305 people have been rescued from low-lying areas of West Tripura district that have been affected by a rain-triggered flash flood, an official said.தில்லியில் கார்கள் மோதல்: இரண்டு எம்.எல்.ஏ.க்கள் உட்பட 6 பேர் காயம்!