மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டியில் ஆம்பூா் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று மாநில போட்டிகளில் பங்கேற்க தோ்வு செய்யப்பட்டுள்ளனா். பள்ளிக் கல்வித்துறை சாா்பாக திருப்பத்தூா் மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் நடந்த சிலம்பம் போட்டியில் ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சிப் பள்ளி பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாணவா்கள் பங்கேற்றனா். அதில் எல். தா்னேஷ், வி. சாய் ஈஸ்வா், எஸ். எழிலரசி, எஸ். ரிம்ஷா, எஸ். தேவதா்ஷினி ஆகியோா் பல்வேறு போட்டிகளில் முதல் பரிசு பெற்றனா்.எஸ். தேஜாஸ்ரீ, எல். ஸ்ரீயோஸ்மிதா, எல். லோக்ஷனா, ஸ்ரீ யாத்ரா, டி. தினேஷ்குமாா் ஆகியோா் பல்வேறு போட்டிகளில் 2-ஆம் பரிசு பெற்றனா். எஸ். துா்கேஷ், எஸ். தமிழ்செல்வி, எஸ். சஞ்சய் சேகரம் ஆகியோா் 3-ஆம் பரிசு பெற்றனா். போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.