நேபாள வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியானததைத் தொடர்ந்து, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் நேபாள அதிபர் ராம் சந்திர பௌடல் ஆகியோரிடம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இரங்கல் தெரிவித்துள்ளார்.திபெத்தின் எல்லையில் அமைந்துள்ள நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தின் போடே கோஷி ஆற்றில், கடந்த ஆக. 26 ஆம் தேதி பனிப்பாறை உடைந்து திடீரென மாபெரும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் அங்குள்ள கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததுடன், 500-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து, வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன இந்தியர்கள் உள்பட சுமார் 1,500 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தில் சிக்கி மக்கள் பலியானதைத் தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் மற்றும் நேபாள அதிபர் பௌடல் ஆகியோருக்கும், இருநாடுகளின் அரசுகள் மற்றும் பலியானவர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதாகக் கூறி வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்று (ஆக. 28) செய்தி வெளியிட்டுள்ளார். முன்னதாக, திபெத் பகுதியிலிருக்கும் அணை ஒன்று உடைந்தது மற்றும் புதியதாக உருவான ஏரிகளால் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளதாகக் கூறி அனைவரையும் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல நேபாளம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.அடுத்த 72 மணிநேரத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறதா? சீனா எச்சரிக்கைFollowing the deaths of hundreds of people in the Nepal floods, North Korean leader Kim Jong Un has conveyed his condolences.