“ஐயா, ஒரே நிமிஷம்... மக்கள் அடித்தே விடுவார்கள்” - திமுக எம்.எல்.ஏ. பேச்சால் சிரிப்பலை!

Wait 5 sec.

கோரிக்கைகளை சொல்லாவிட்டால் மக்கள் அடிச்சே புடுவாங்க என்று சட்டப்பேரவையில் பேசிய வால்பாறை திமுக எம்.எல்.ஏ. சுதாகரின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது.தமிழ்நாடு சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்களில் கோரிக்கைகள் குறித்து அவையில் பேசினர்.வால்பாறை தொகுதியின் திமுக எம்.எல்.ஏ. சுதாகர் எழுந்து தனது கோரிக்கைகள் குறித்து பேசினார். முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கே.என். நேரு, கொறடா எ.வ. வேலு, அமைச்சர்கள், வால்பாறை தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து அவர் பேசுகையில், “மதுரை, திருச்சியிலிருந்து வந்த மக்கள்தான் வால்பாறையில் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கேரளத்துக்கு இணைய ஊதியம் வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்” என்று தொடர்ந்து திமுக அரசின் சாதனைகளையும் பேசினார்.அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்த நிலையில், பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் குறுக்கீட்டு அவரை நன்றி சொல்லி நிறுத்துங்கள் என்று கூறி மணி எழுப்பி எச்சரித்தார். அதற்கு திமுக எம்.எல்.ஏ. சுதாகர், “ஐயா மணி அடிக்காதீங்க எனக்கு சாமி வந்து விடும்” என்று கூறியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.அதையும் தொடர்ந்து பேசும்போது, “தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் எல்லாம் மதுரை, திருநெல்வேலி, சேலம் பகுதியிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு வீடு வசதி கிடையாது. கடந்தாண்டுகளில் காட்டு விலங்குகளால் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்” என்று பேச, “ வாங்க நன்றி சொல்லி முடிங்க” என்று பேரவைத் தலைவர் குறுக்கிட்டார். தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ. சுதாகர், “ஐயா, ஒரே நிமிஷம்... எல்லாத்தையும் சொல்லிவிட்டுத்தான் வர வேண்டும் என்று மக்கள் கூறியிருக்கிறார்கள். 720 கி.மீ. தொலைவிருந்து வருகிறேன். சொல்லாமல் சென்றால் அடித்தேவிடுவார்கள். பேசுவதற்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள்.வால்பாறை தொகுதில் 40 எஸ்டேட்கள் உள்ளன. அங்கு செல்போன் டவர்களே இல்லை. யானை வந்தால், யானை வந்துவிட்டது என்று சொல்வதற்கு கூட சிக்னல் கிடையாது.டவர் இல்லாததால் தான் நானே எம்.எல்.ஏ ஆனேன்; டவர் இருந்திருந்தால் இன்ஸ்டா ரீல்ஸ்லாம் வந்திருக்கும்” என்று பேச அவையே சிரிப்பலையால் நிறைந்தது.Laughter rippled through the Legislative Assembly following remarks by Valparai DMK MLA Sudhakar, who stated that if he failed to voice the people's demands, they would beat him up and snatch them away.