நார்வே மன்னர் ஹரால்ட் உடல்நிலை கவலைக்கிடம்!

Wait 5 sec.

நார்வே நாட்டின் மன்னர் ஐந்தாம் ஹரால்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டின் மன்னராக, கடந்த 1991 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் 89 வயதான ஐந்தாம் ஹரால்ட் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு கடந்த சில வாரங்களாகச் சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் தலைநகர் ஆஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் ஹரால்ட் சில நாள்கள் கழித்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்த நிலையில், மன்னர் ஹரால்ட்டிற்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும்; இதனால், அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், நார்வே அரசு மாளிகை இன்று (ஆக. 27) அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பால் மன்னர் ஹரால்ட் ஓய்வுபெற்று வரும் நிலையில், அவரது மகனும் நார்வே நாட்டின் பட்டத்து இளவரசருமான ஹாக்கோன் அரசுப் பிரதிநிதியாகச் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.நேபாள வெள்ளத்தில் 644 பேர் மாயம்; இந்தியர்கள் 178 பேர்! - நேபாள அரசு அறிவிப்பு!It has been reported that the health of King Harald V of Norway is in a critical condition.