மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Wait 5 sec.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை(ஆக.28) அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,890-க்கு விற்பனையாகிறது. காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த தங்கம் மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் ரூ.3,040 குறைந்த நிலையில் ஒரேநாளில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000 விற்பனை செய்யப்படுகிறது.The price of sovereign gold in Chennai rose sharply on Friday evening (Aug 28).தங்கம் இன்று வாங்கலாமா?