சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் ‘வந்தே பாரத்’, ‘அம்ரூத் பாரத்’, எல்எச்பி ரயில்களுக்கான பெட்டிகள் உள்ளிட்ட பல்வேறு ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் 1961-ஆம் ஆண்டு தொழிற்பயிற்சிச் சட்டத்தின் கீழ் தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பயிற்சி: தொழில்பழகுநர் (Apprentices)காலியிடங்கள்: 1,010தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்காலம்.வயது வரம்பு: ஐடிஐ முடித்தவர்கள் 15 முதல் 24 வயதிற்குள்ளும்; ஐடிஐ அல்லாதவர்கள் 15 முதல் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பயிற்சி அளிப்படும் இடம்: சென்னை பெரம்பூர்ஊக்கத்தொகை: பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8,200, மற்றவர்களுக்கு மாதம் ரூ.9,600 வழங்கப்படும்.தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பிப்பவர்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: https://pb.icf.gov.in/act2026/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.9.2026ONLINE applications are invited from eligible candidates for engagement as Act Apprentices for imparting training under the....