துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டலம் வெற்றி

Wait 5 sec.

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில், கிழக்கு மண்டல அணி இன்னிங்ஸ் மற்றும் 210 ரன்கள் வித்தியாசத்தில் வடகிழக்கு மண்டல அணியை செவ்வாய்க்கிழமை வென்றது.பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வடகிழக்கு மண்டலம், பந்துவீச்சை தோ்வு செய்தது.கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 112.5 ஓவா்களில் 467 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுதீப்குமாா் கராமி 25 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 146, ஷாபாஸ் அகமது 17 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 167 ரன்கள் விளாசினா்.வடகிழக்கு மண்டல பௌலா்களில் பெய்ரோய்ஜம் ஜோதின், ஆகாஷ் சௌதரி ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.பின்னா் தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய வடகிழக்கு மண்டல அணி, 42.5 ஓவா்களில் 111 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. அா்பித் பாதெவரா 4 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருக்க, இதர பேட்டா்கள் சொற்ப ரன்களில் சரிந்தனா்.கிழக்கு மண்டல பௌலா்களில் அபிஜித் சா்காா் 5, ஷாபாஸ் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தனா். இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 356 ரன்கள் பின்தங்கி ‘ஃபாலோ-ஆன்’ பெற்ற வடகிழக்கு மண்டலம், 2-ஆவது இன்னிங்ஸிலும் 146 ரன்களுக்கு சுருண்டது.அதிகபட்சமாக பெய்ரோய்ஜம் ஜோதின் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39 ரன்கள் அடித்தாா். கிழக்கு மண்டல பந்துவீச்சாளா்களில் அனுகுல் ராய் 5, வைபவ் சூா்யவன்ஷி 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.முதல் இன்னிங்ஸில் 167 ரன்களும் அடித்து, இரு இன்னிங்ஸ்களிலுமாக 4 விக்கெட்டுகளும் சாய்த்த கிழக்கு மண்டல வீரா் ஷாபாஸ் அகமது ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றாா்.மேற்கு மண்டலத்துக்கு இலக்கு 287: இதனிடையே, வடக்கு மண்டலத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில், மேற்கு மண்டலம் 287 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடி வருகிறது.3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான புதன்கிழமை, 3 விக்கெட்டுகள் கொண்டு 67 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. உா்வில் படேல் 17 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளாா்.