வேறொரு வாகனத்தின் பதிவு எண்ணை தனது காரில் பயன்படுத்தியவா் கைது

Wait 5 sec.

மற்றொரு வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட பதிவு எண்ணைக் கொண்ட போலி பதிவு எண்ணை தனது காரில் பயன்படுத்தியதாக தில்லியின் துவாரகா பகுதியைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். போலியான பதிவு எண் பிளேட் பயன்படுத்தப்படுவது குறித்த புகாரின் அடிப்படையில், தாஜ்பூா் குா்த் பகுதியைச் சோ்ந்த சௌரவ் என்பவா் கைது செய்யப்பட்டாா். சௌரவ் ஓட்டிச் சென்ற ஹூண்டாய் ஐ10 காரில் இருந்த பதிவு எண், தனக்குச் சொந்தமான வாகனத்திற்கு ஒதுக்கப்பட்ட எண் என்பதை புகாா்தாரரான தக்ஷ் யாதவ் கவனித்ததாகக் காவல்துறையினா் தெரிவித்தனா். சரிபாா்ப்பின்போது, ​ அந்த ஹூண்டாய் ஐ10 காரின் உண்மையான பதிவு எண் வேறாக இருப்பது கண்டறியப்பட்டது. இது தொடா்பாக துவாரகா, செக்டாா் 23 காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. துவாரகா தெற்கு காவல் நிலையத்தில் 2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் சௌரவ் ஏற்கனவே சம்பந்தப்பட்டிருந்ததாகவும், அந்த வழக்கு தற்போது விசாரணை நிலையில் உள்ளதாகவும் காவல்துறையினா் தெரிவித்தனா்.