ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வு!

Wait 5 sec.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸின் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில், இன்றைய வர்த்தகத்தில் 7.7% வரை உயர்ந்து, இந்த ஆண்டின் மிகப்பெரிய ஒற்றை நாள் ஏற்றமாக ரூ. 574.20 என்ற உச்சத்தை எட்டியது.வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற அதன் செயற்கை நுண்ணறிவு தினத்தில், நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, இந்தப் பங்கு வாங்குவதற்கான ஆர்வம் முதலீட்டாளர்களிடம் அதிகரித்தது.செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றத்தால், 2029க்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்ப்பதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றம், மேற்கு ஆசிய விரிவாக்கம், தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சி மற்றும் தனியார் முதலீடு உள்ளிட்ட காரணிகளால், நிறுவனத்தின் வருவாய் சுமார் 1.5 பில்லியனிலிருந்து 2029-க்குள் 3 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்ப்பதாக தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீகிருஷ்ணா தெரிவித்தார்.இன்றைய வர்த்தகத்தில், ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் பங்குகள் 4.04% உயர்ந்து ரூ. 555 ஆக வர்த்தகமானது.Shares of information technology company Hexaware Technologies rose as much as 7.7%.டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ. 95.74 ஆக நிறைவு!