சாய் அபயங்கரின் ரதிமா பாடல் இன்று வெளியாகியுள்ளது. இண்டி இசை எனப்படும் தனியிசைப் பாடல்கள் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாய் அபயங்கர். இவரது முதல் பாடலான ’கட்சி சேர’ மிகப்பெரிய ஹிட் அடித்ததைத் தொடர்ந்து, அடுத்தடுத்த பாடல்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ட்யூட் படம் மூலம் தமிழில் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமான இவர், அடுத்தடுத்து 10 முக்கியமான படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.சில மாதங்களுக்கு முன் வெளியான கருப்பு திரைப்படத்தில் இவரின் இசை பெரிதும் பேசப்பட்ட நிலையில், அதே சமயம் வெளியான அவரது தனியிசைப் பாடலான ‘பவழ மல்லி’ பாடலும் பெரியளவில் ஹிட் ஆனது. அப்பாடலில், இவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருந்தார். இந்த நிலையில், சாய் அபயங்கரின் 6-வது தனியிசைப் பாடலான ’ரதிமா’ இன்று வெளியாகியுள்ளது. வழக்கமாக முன்னணி நடிகைகளைத் தன் பாடல்களில் நடிக்க வைக்கும் இவர், இம்முறை நடிகை பாக்யஸ்ரீ போர்ஸை ஆட வைத்துள்ளார்.ரதிமா பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். தேஜே பரஜ்வாஜ் இயக்கியுள்ளார். இதற்கு அடுத்ததாக, சாய் இசையமைத்துள்ள விஜய் சேதுபதியின் ‘பத்தா’ திரைப்படம் வருகிற அக்டோபர் 1 அன்று வெளியாகவுள்ளது. Sai Abhyankar's new song, 'Radhimaa', has been released today.த்ரிஷ்யம் - 4 உருவாகிறதா... தயாரிப்பாளர் சொல்வது என்ன?