ரவி தேஜாவின் இருமுடி கட்டு வசூல் இவ்வளவா?

Wait 5 sec.

நடிகர் ரவி தேஜாவின் இருமுடி கட்டு திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான இருமுடி கட்டு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. கடந்த காலத்தில் வன்முறையான வாழ்க்கை வாழ்ந்த; குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மற்றும் அவரது மகளைச் சுற்றி நகர்கிறது. மகளின் விருப்பத்திற்காக அவர் ஐயப்ப தீட்சை மேற்கொள்வதும், அதன் மூலம் அவரது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களுமாக கதை எழுதப்பட்டிருந்தது. நாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.இந்த நிலையில், வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இருமுடி கட்டு திரைப்படம் இதுவரை ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். கடின உழைப்பு மட்டும் போதாது: இயக்குநர் பி. எஸ். மித்ரன்Details regarding the box office collection of actor Ravi Teja's film Irumudi Kattu have been released.