நடிகர் கார்த்தி நாயகனாக நடித்துள்ள சர்தார் - 2 முதல் பாடல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த சர்தார் 2 திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. உளவுக்கதையாகவே எழுதப்பட்டுள்ள இந்தப் படத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.நடிகர்கள் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடலாக முருகன் பாடலை வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சாம் சிஎஸ் இசையமைப்பில் உருவாகும் 100-வது திரைப்படம் என்பதால் இப்பாடல் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடின உழைப்பு மட்டும் போதாது: இயக்குநர் பி. எஸ். மித்ரன்An announcement has been made regarding the first song from the movie Sardar 2, starring actor Karthi.