ஜிசிடி டூர்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

Wait 5 sec.

தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா கிராண்ட் செஸ் டூரின் அரையிறுதிப் போட்டியில் வென்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். முன்னதாக நடைபெற்ற சிங்க்ஃபீல்டு கோப்பையில் இறுதிப் போட்டியில் வென்றாலும் புள்ளிப் பட்டியலில் சமனாக இருந்ததால், ஆர்மகெடான் போட்டிகளிலும் சமனில் முடிந்து சில விதிகளின்படி கோப்பையை இழந்தார். சிங்க்ஃபீல்டு கோப்பையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வீரர்கள் கிராண்ட் செஸ் டூரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதியானார்கள். இந்த அரையிறுதிப் போட்டியில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் மோதினார். இந்தப் போட்டியில் 9-3 என முன்னிலை வகித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.இந்தப் போட்டியில் கீமர் தனது 55ஆவது நகர்த்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இந்தத் தொடரில் மொத்தமாக 4,50,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றியாளருக்கு 2,00, 000 அமெரிக்க டாலர் வழங்கப்படும். இரண்டு, மூன்றாமிடம் பிடிப்பவர்களுக்கு முறையே 1,25,000 மற்றும் 75, 000 அமெரிக்க டாலர் வழங்கப்படும். கடைசி இடம் பிடிப்பவருக்கு 50,000 அமெரிக்க டாலர் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு அரையிறுதியில் ஃபாபியானோ கரானா உடன் சிங்க்ஃபீல்டு கோப்பை வென்ற வெஸ்லி ஸோ மோதுகிறார்கள். இதில் வெல்பவருடன் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் மோதவிருக்கிறார்.என்ன நடந்தது எனத் தெரியாமல் பேசாதீர்கள்... இலங்கை வீரருடனான மோதலுக்கு ஜெய்ஸ்வால் பதில்!GCT Grand Finale: Praggnanandhaa beats Keymer to stake his claim for finals