இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ள சர்தார் 2 திரைப்படத்தின் முதல் பாடலான 'மயில்வீரா' வெளியானது.படத்தில் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகிபாபு மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இந்நிலையில், தமிழ்க் கடவுள் முருகனை மையப்படுத்தி, படத்தின் 'மயில்வீரா' என்ற பாடல் வெளியானது.