புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம்

Wait 5 sec.

புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. தில்லியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், வளாகத்தை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், புதிய நாடாளுமன்ற கட்டட திட்டமிடலை பலரும் விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தின் ஒரு வாயில் அருகே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடும் விடியோவை காங்கிரஸ் கட்சி பகிர்ந்து, நரேந்திர மோடியின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை விமர்சித்துள்ளது. இது தொடர்பான விடியோவில், ''கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து நரேந்திர மோடி கட்டிய நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் நிலையைப் பாருங்கள்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது. தில்லியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையும், சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தென்கிழக்கு தில்லி, கிழக்கு தில்லி, ஷாதரா, மத்திய தில்லி, வடகிழக்கு தில்லி, தெற்கு தில்லி, புதுதில்லி, தென்மேற்கு தில்லி, மேற்கு தில்லி, வடமேற்கு தில்லி மற்றும் வடக்கு தில்லியின் சில பகுதிகளில் கனமழையுடன் இடியுடன் கூடிய மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.வேகமாகப் பரவி வரும் பன்றிக் காய்ச்சல்! மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?Flooding in the new Parliament complex Congress criticizes