பாஜக நாடாளுமன்றக் குழு உறுப்பினராகும் மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ்?

Wait 5 sec.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பாஜகவின் 12 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு மிக உயரிய முடிவுகளை எடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாகும். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்றோர் உறுப்பினர்களாக உள்ளனர்.மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இக்குழுவில் உறுப்பினராக இருந்த நிலையில் பின்னர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். தற்போது மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த எந்த அரசியல் தலைவரும் பாஜகவின் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறவில்லை. இந்த நிலையில், தில்லியில் எதிர்கால அரசியலுக்கான இளம் முகமாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை நாடாளுமன்றக் குழுவில் சேர்க்க ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆர்வம் காட்டுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதுபற்றிப் பேசிய பாஜக மூத்தத் தலைவர் ஒருவர், “பாஜக தேசியத் தலைவர் பல்வேறு உறுப்பினர் நியமனங்களை புதிதாக அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, மத்திய அரசியலுக்கு புதிய தலைமையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நாடாளுமன்றக் குழுவில் பழைய உறுப்பினர்கள் சிலரை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக மாற்றங்கள் செய்யப்படலாம் என விவாதிக்கப்படுகிறது.மாநில முதல்வர் யாருக்கும் நாடாளுமன்றக் குழுவில் இடம் அளிக்கப்படவில்லை. எனவே, ஃபட்னவீஸ் நாடாளுமன்றக் குழு உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கு சில தலைவர்கள் தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.ஃபட்னவீஸுக்கு இந்தக் குழுவில் இடம் கிடைத்தால் அது அவரது தேசிய அரசியலுக்கானக் கதவுகளைத் திறப்பதாக அமையும். பிரதமர் பதவிக்கான போட்டியிலும் அவர் இடம்பெறும் வாய்ப்புள்ளது. ஏனெனில், நிதின் கட்கரிக்குப் பிறகு நாக்பூரைச் சேர்ந்த ஃபட்னவீஸ் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகவும் விருப்பத்திற்குரிய தலைவராக இருக்கிறார்.ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு விசுவாசமாக, இந்துத்துவக் கொள்கைகளைக் கொண்ட ஃபட்னவீஸை பாஜகவின் எதிர்காலமாக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் ஆர்வம் காட்டுகின்றது” என்று அவர் தெரிவித்தார்.இதுபற்றி ஃபட்னவீஸிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “மகாராஷ்டிரத்தின் முதல்வர் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டுள்ளது. தில்லிக்குச் செல்வதில் எனக்கு விருப்பமில்லை" என்று பதிலளித்திருந்தார்.ஆனால், மகாயுதி கூட்டணி அமைச்சர்களுக்கு தனது இல்லத்தில் சமீபத்தில் ஃபட்னவீஸ் விருந்து வழங்கினார். இதன்மூலம், தேசிய அரசியலுக்கு அவர் தன்னைத் தயார்படுத்தி வருவதாக ஊகங்கள் கிளம்பியுள்ளது.Reports indicate that Maharashtra Chief Minister Devendra Fadnavis is likely to be appointed as a member of the BJP's parliamentary board.ஈரானுடன் வர்த்தகம்: 4 இந்திய நிறுவனங்களுக்குத் தடை விதித்த அமெரிக்கா!