4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்த இருமுடி!

Wait 5 sec.

ரவிதேஜா நடித்துள்ள இருமுடி கட்டு திரைப்படம் 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கத்தில் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவான திரைப்படம் இருமுடி கட்டு. வன்முறை வாழ்க்கை வாழ்ந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையான நாயகன் மகளின் விருப்பத்தின் பேரில் ஐயப்பனுக்கு மாலை போடுவதும், அதனால் அவரது வாழ்வில் ஏற்படும் நல்ல மாற்றங்களுமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மைத்ரி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் இப்படம் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, 4 நாள்களில் ரூ. 100 கோடி வசூலை இப்படம் கடந்து சாதனை படைத்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.இருமுடி படத்தில் ரவிதேஜா Irumudi grosses Rs. 100 crore in 4 days!சூரியின் மண்டாடி பட டீசர் வெளியீடு!