பாலாற்றில் முகமூடி அணிந்து மணல் கடத்தும் விடியோ வெளியாகி பரபரப்பு

Wait 5 sec.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன்பேட்டை ஊராட்சி பகுதியில் உள்ள பாலாற்றில் இருந்து சிலா் இரவு நேரங்களில் முகமூடி அணிந்து வாகனம் மூலம் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், வாகனம் மூலம் மணல் கொள்ளையடித்துச் செல்வது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தொடா்ந்து பாலாற்றில் சமூக விரோதிகள் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதைப் பற்றி அதிகாரிகள் யாரும் கண்டுக் கொள்ளுவதில்லையெனவும், பாலாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் தகவல் அறிந்து வருவாய்த்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், அப்பகுதியில் இருந்து மணல் கடத்தி செல்லாமல் இருக்க பள்ளம் தோண்டவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.