மீலாது நபியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனைக்கு புதன்கிழமை (ஆக. 26) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக அன்று ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது. இருப்பினும், அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி மருத்துவா் சிவக்குமாா் தெரிவித்துள்ளாா்.