மீலாது நபி தினத்தை முன்னிட்டு, புதன்கிழமை (ஆக. 26) மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என சென்னை ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை (ஆக. 26) மீலாது நபி தினத்தை முன்னிட்டு, அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களில் அனைத்தும் கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.