ஓணம் திருநாளை முன்னிட்டு, கணினி மயமாக்கப்பட்ட ரயில் முன்பதிவு மையங்கள் நாளை (ஆக. 26) பிற்பகல் வரை செயல்பட உள்ளது.ஓணம் திருநாள், கேரள மக்களால் பத்து நாள்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய அறுவடைத் திருநாள் ஆகும்.மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாள்கள் நடைபெறும் இந்த விழா கண்ணுக்கு பல வண்ணங்களாக விருந்தளிக்கும் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.இந்த ஓணம் திருநாளை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள், ஞாயிற்றுக்கிழமை பணிநேர முறையைப் பின்பற்றி நாளை காலை 08:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.மேலும், ஓணத்தையொட்டி சென்னையிலிருந்து கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் மங்களூருவுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.பேரவையில் ஆக. 27 முதல் கேள்வி நேரம்In view of the Onam festival, computerized reservation centers will operate until the afternoon tomorrow (August 26).