நேரடியாக ஓடிடியில் வெளியானது பியார் பிரேமா கல்யாணம்!

Wait 5 sec.

இளன் நாயகனாக நடித்த பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. பியார் பிரேமா காதல் மற்றும் ஸ்டார் ஆகிய திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் இயக்குநர் இளன். தற்போது, ’பியார் பிரேமா கல்யாணம்’ எனும் புதிய படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார். சான்வி மேக்னா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் இளங்கோ குமரவேல், ராதிகா சரத்குமார், எம்.எஸ். பாஸ்கர், யோகி பாபு, கீதா கைலாசம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முதல் பாடலான அட்ராசிட்டி சில நாள்களுக்கு முன் வெளியாகி கவனம் பெற்றிருந்தது. இந்த நிலையில், பியார் பிரேமா கல்யாணம் திரைப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. கல்யாணமான நாயகன் மணமகள் வீட்டிற்கு வாழச் சென்று அங்கு மாமியார், மாமனாரால் என்னென்ன இன்னல்களைச் சந்திக்கிறார் என்பதை நகைச்சுவை பாணியில் கூறியுள்ளனர்.The movie Pyaar Prema Kaadhal, starring Elan as the lead, has been released on an OTT platform.