எண்டோஸ்கோபி கேமரா பயன்படுத்தி வினாத்தாள் கசிவு: சத்தீஸ்கரில் 6 பேர் கைது!

Wait 5 sec.

சத்தீஸ்கரில் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டில் கல்லூரி பேராசிரியர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் இந்திரா காந்தி வேளாண் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. அதில் ஆகஸ்ட் 20 அன்று இளநிலை அறிவியல் (பிஎஸ்சி) இரண்டாமாண்டு பூச்சியியல் (எண்டமாலஜி) தேர்வு நடைபெற இருந்தது.கிட்டத்தட்ட 27 வேளாண் கல்லூரிகளில் இருந்து 1,200 மாணவர்கள் தேர்வெழுதவிருந்த நிலையில், சமூக ஊடகங்களில் வினாத்தாள் கசியவிடப்பட்டதைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதுதொடர்பாக, டெலிபந்தா பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த சுமார் 100 காவலர்கள் கொண்ட குழு, சைபர் செல் தொழில்நுட்ப உதவியுடன் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாக பாரதி வேளாண் கல்லூரி பேராசிரியர் யோகேஷ் சோன்கேசரியா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக, பல்கலைக்கழகத்திற்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்வதும், விடைத்தாள்களைத் திரும்ப ஒப்படைப்பதும் அவரது பொறுப்பாக இருந்து வந்தது.விசாரணையில், யோகேஷ் சோன்கேசரியா சீல் வைக்கப்பட்ட உறையில் இருந்த வினாத்தாள் கட்டுகளை அவரது வீட்டிற்கு கடந்த ஆகஸ்ட் 17 அன்று எடுத்துச் சென்றுள்ளார். பின்னர், ஒரு ஊசி, ஒரு இரும்புக் கம்பி மற்றும் ரூ. 2,500 மதிப்புள்ள எண்டோஸ்கோபி கேமரா ஆகியவற்றைப் பயன்படுத்தி அந்த உறையின் சீலை பிரிக்காமல் சிறிய துளையிட்டு கேமரா மூலம் வினாத்தாளைப் பதிவு செய்ததாகத் தெரிய வந்துள்ளது. அவர் அந்த வினாத்தாளை மாணவர்களிடம் ரூ. 11,000-க்கு விற்பனை செய்ததாகவும், வினாத்தாள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து பல்கலை நிர்வாகம் தேர்வை ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இந்தக் குற்றச்சாட்டில், பேராசிரியர் யோகேஷ் மற்றும் 5 மாணவர்கள் என 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகள் மீறப்பட்டது குறித்து கல்லூரி முதல்வர் மற்றும் துறைத் தலைவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய்,” வினாத்தாள் கசிவை மிகவும் தீவிரமாகக் கருத்தில் கொண்டுள்ளோம். தேர்வுகளில் நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை போன்றவற்றில் எந்தவித சமரசமும் இருக்காது. தேர்வு முறையை மோசமாக்கி, மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார். முதல்வரின் உத்தரவின் பேரில் 5 நபர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேர்வு செப்டம்பர் முதல் வாரம் நடைபெறவுள்ளது. Six people, including a college professor, have been arrested in Chhattisgarh on charges of a question paper leak.தில்லி ஐஐடி வளாக கட்டடத்திலிருந்து குதித்து மாணவர் தற்கொலை