குஜராத்தில் வாகனத்தின் டீசல் டேங் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் உள்ள பழைய இரும்பு கிடங்கில் சனிக்கிழமை வணிக வாகனத்தின் டீசல் டேங்க் வெடித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 4 பேர் பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகலில் நக்கத்ரானா பகுதியில் நடந்துள்ளது.பலியானவர்கள் முகமது இலியாஸ் (30), நூர் முகமது இலியாஸ் (26), ஹுசைன் முகமது (3.5) மற்றும் நூர் பாத்திமா (3) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முகமது இலியாஸும் நூர் முகமது இலியாஸும் வாகனத்தில் இருந்து பழைய இரும்புப் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்தபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இந்த வெடிப்பின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்ததால், அப்போது வாகனத்தின் அருகே இருந்த இரு சிறுவர்களும் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடி விபத்துக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.Four persons, including two children from a family, were killed after the fuel tank of a commercial vehicle exploded at a scrap yard in Gujarat's Kutch district on Saturday, police said.ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத்