விதிகளை மீறிய இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா மீது ஐசிசி நடவடிக்கை!

Wait 5 sec.

நடுவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கை வீரர் பிரபாத் ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது.இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 2-ஆம் நாள் முடிவதற்கு சற்று நேரத்துக்கு முன்னதாக இந்திய அணி 138 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆட்ட நேரம் முடிவதற்கு முன் இலங்கை வீரர்கள் களத்துக்கு வந்தனர். இரண்டாவது நாள் ஆட்டத்தில், இலங்கை அணி வீரர்கள் ஆடிய போது போதிய வெளிச்சம் இல்லாததால், இதுகுறித்து இலங்கை வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், கள நடுவர்கள் போட்டியை தொடர்ந்ததால் கடும் அதிருப்தி அடைந்தனர்.வெளிச்சம் குறைவாக இருந்ததால் ஆட்டத்தை நிறுத்த வேண்டும் என்று இலங்கை பேட்ஸ்மேன்களான கமில் மிஷாரா மற்றும் பிரபாத் ஜெயசூர்யா ஆகியோர் நடுவர்களிடம் முறையிட்டனர். ஆனால் கள நடுவர்களான அஹ்சன் ரஸா மற்றும் ஷர்ஃபோத்துல்லா சைகத் இருவரும் வெளிச்சத்தின் அளவை கணக்கிட்டு, இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தினால் ஆட்டத்தைத் தொடரலாம் என தெரிவித்தனர்.ஆட்டம் நேர முடிவில், 3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இலங்கை அணி 8 ரன்கள் எடுத்திருந்தது. மானவ் சுதர் கடைசி பந்தில் இரவுக்காப்பாளராக வந்த பிரபாத் ஜெயசூர்யா 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட்டை விட்டதும் ஜெயசூர்யா தனது கையுறைகளை ஓய்வறையில் வீசி நடுவர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். அந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகின.சர்வதேசப் போட்டியின் போது கிரிக்கெட் உபகரணங்கள் அல்லது விளையாட்டு ஜெர்ஸிகள், வீரர்கள் மற்றும் ஊழியர்களைத் தாக்குதல் உள்ளிட்ட ஐசிசி நடத்தை விதிகளின் 2.2-வது பிரிவை ஜெயசூரியா மீறியதாக ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு ஐசிசி கண்டனத்தையும் தெரிவித்து ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது. ஜெயசூர்யா தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளதால், அவர் விசாரணைக்கு ஆஜராகத் தேவையில்லை.முன்னதாக, இந்தப் போட்டியின் முதல் நாளில் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கைப் பந்து வீச்சாளர் அசிதா பெர்னான்டோவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஐசிசியின் விதிகளை மீறியதால் இருவருக்கும் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.இந்த ஒழுங்கீன செயலில் ஈடுபட்ட இருவருக்குமே ஐசிசி அபராதம் மட்டுமில்லாமல் ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கியுள்ள நிலையில், ஒரே போட்டியில் மூன்றாவது வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.The final moments of Day 2 action in the second India vs Sri Lanka Test in Colombo were frustrating for the hosts. Prabhath Jayasuriya lost his wicket on what turned out to be the final ball of the day.