பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர் அசத்தல்; முதல் இன்னிங்ஸில் இலங்கை 265 ரன்கள் சேர்ப்பு!

Wait 5 sec.

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா - இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்ஸில் 8 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்த இலங்கை அணி, இன்று (ஆகஸ்ட் 25) மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்துள்ளது.அந்த அணியில் பசிந்து சூர்யபந்தாரா 133 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கமிந்து மெண்டிஸ் 32 ரன்களும், கமில் மிஷாரா 19 ரன்களும் எடுத்தனர். ஆட்டத்தின் பொறுப்பை உணர்ந்து விளையாடி வரும் சோனல் தினுஷா 85 ரன்களுடன் களத்தில் உள்ளார். அவருடன் லகிரு குமாரா 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்.இந்தியா தரப்பில் பிரசித் கிருஷ்ணா மற்றும் மானவ் சுதர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.இலங்கை அணி இந்தியாவைக் காட்டிலும் 238 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.In the second Test match against India, the Sri Lankan team has scored 265 runs for the loss of 8 wickets in the first innings.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுமா? டிராவிட் கூறுவதென்ன?