கலாச்சாரம் என்பது பெண்களின் ஆடையில் இல்லை..! கங்கனாவுக்கு கீர்த்தி சனோன் பதிலடி!

Wait 5 sec.

நடிகை கீர்த்தி சனோன் தன் மீதான கங்கனா ரணாவத் வைத்த விமர்சனத்துக்கு, “கலாச்சாரம் என்பது இதயத்தில் இருக்கிறது; ஆடையில் இல்லை” என கடுமையான பதில் அளித்துள்ளார். பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தனது சகோதருருக்கு ராக்கி கட்டுவது போல் ஒரு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரத்திற்கு நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் விமர்சித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.நமது கலாச்சரத்தைக் காக்க விதவிதமான ஆடைகள் இருந்தும் பிகினி/ உள்ளாடைகள் அணிந்து சகோதரருக்கு ராக்கி கட்டுவது ஏன்? என கங்கனா தனது விமர்சனத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்வைத்திருந்தார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானது. இரு பக்கமும் ஆதரவும் எதிர்ப்புமாக இந்த விவாகரம் எழவே தற்போது நடிகை கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: திருவிழாக்களின் சாராம்சம் என்பது நீங்கள் அணியும் ஆடைகளில் இல்லை; அது பாரம்பரியத்தின் மீது நீங்கள் கொண்டுள்ள உணர்வுகளிலும் அர்த்தத்திலும்தான் இருக்கிறது.ரக்‌ஷாபந்தன் என்பது பாதுகாப்பிற்கான ஒரு பிணைப்பு. நானும் என் சகோதரியும் ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொள்கிறோம். ஒரு சகோதரனை விட எங்களால் ஒருவரையொருவர் எந்த வகையிலும் குறைவாகப் பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பதை நாங்கள் அறிவோம். ஒருவருக்கொருவர் ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை, இந்த பிரார்த்தனையும் வாக்குறுதியும் எங்கள் நாய்களுக்கும் நீட்டிக்கப்படுகிறது! எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்களும் எங்கள் குடும்பம்தான்!மேலும், பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்று சொல்வதை நாம் எப்போது நிறுத்தப் போகிறோம்? இனக்குழுவின் நாகரிகம் பல ஆண்டுகளாக வளர்ச்சியடைந்துள்ளது. ஆனால், இன்னும் ஒரு பெண்ணின் கலாச்சாரத்திற்கான மரியாதை அவளது உடைகளை வைத்தே அளவிடப்படுகிறது!!கலாச்சாரமும் பாரம்பரியமும் அவளது இதயத்தில் இருக்கிறதே தவிர, அவளது கழுத்தைச் சுற்றிலும் அணிந்துள்ள ஆடையில் இல்லை எனக் கூறியுள்ளார். கீர்த்தி சனோன் பதிலடி. பிகினியுடன் ராக்கி கட்டுவது ஏன்? கீர்த்தி சனோனை விமர்சித்த கங்கனா ரணாவத்!Kriti Sanon hits back at Kangana Ranaut's 'bikini' attack, says: 'Culture is in the heart, not attire'