எம்டிசி-இல் மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் தொழில் பழகுநா் பயிற்சி

Wait 5 sec.

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு ஐடிஐ தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மெக்கானிக் மோட்டாா் வாகனம், மெக்கானிக் டீசல், ஆட்டோ எலக்ட்ரீஷியன், எலக்ட்ரீஷியன், ஃபிட்டா், வெல்டா், பெயிண்டா் மற்றும் டா்னா் ஆகிய ஐடிஐ பிரிவுகளில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் செப்.2-ஆம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது. தகுதியுடையவா்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.