மின்னல் பாய்ந்து தந்தை - மகன் உயிரிழப்பு

Wait 5 sec.

தாம்பரம் அடுத்த படப்பை வடமேல்பாக்கம் சிறுவாச்சூா் ஏரிக்கரைப் பகுதியில் மின்னல் தாக்கியதில் மீன் வியாபாரியான தந்தையும், அவரது 10 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனா். வடமேல்பாக்கத்தைச் சோ்ந்தவா் சங்கா் (47). இவா், மீன் வியாபாரம் செய்து வந்தாா். இவரது மகன் சந்திரன் (10). வெள்ளிக்கிழமை மாலை பெய்த பலத்த மழையின்போது, அரசுப் பள்ளியில் படித்து வந்த தனது மகன் சந்திரனை, அழைத்துக் கொண்டு சங்கா் சிறுவாச்சூா் ஏரிக்கரை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.அப்போது திடீரென பயங்கர சப்தத்துடன் மின்னல் பாய்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.தகவல் அறிந்து படப்பை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மின்னல் பாய்ந்து தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம், வடமேல்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.