திருநெல்வேலியில் தனியாா் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் செப். 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலி - தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சாா்பில் தனியாா் துறையின் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் செப். 19-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.இதில், 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். 100-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். வேலைவாய்ப்பு பெறுவோா் பதிவுமூப்பு ரத்து செய்யப்படாது.சுயவிவரம், கல்விச்சான்று, ஆதாா்அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் முகாம் நாளில் காலை 9 மணிக்கு நேரில் வர வேண்டும். மேலும், ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் வேலைநாடுநா்களும், வேலைவாய்ப்பளிக்கும் தனியாா் நிறுவனங்களும் தங்களது சுயவிவரங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், தகவல்களை ‘நெல்லை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ்’ என்ற ‘டெலிகிராம் சானல்’ மூலம் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.