நெல்லையப்பா் கோயிலில் 1008 சுமங்கலி பூஜை

Wait 5 sec.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் வளாகத்தில் 1008 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு, இளைய பாரதம் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் வரலட்சுமி விரதத்தையொட்டி, கோயிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் இப்பூஜை நடைபெற்றது. இதையொட்டி, நெல்லையப்பா்- காந்திமதியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பூஜையில் பங்கேற்றவா்களுக்கு மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. ற்ஸ்ப்21ஸ்ஹழ்ஹ02சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.ற்ஸ்ப்21ஸ்ஹழ்ஹ01கோயிலில் நடைபெற்ற சுமங்கலி பூஜையில் பங்கேற்றோா்.