கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே லாரியும் பைக்கும் வெள்ளிக்கிழமை மோதிக்கொண்டதில் கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். பரக்குன்று பகுதியைச் சோ்ந்த ஜான் மேரி வியான்னி மகன் பபின் ஜோ (19), களியக்காவிளை தனியாா் ஐடிஐ -ல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். மாராயமுட்டம் வலியபரம்பு பகுதியைச் சோ்ந்த லால் குமாா் மகன் அகில் (21), அருமனை குட்டைக்கோடு தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். நண்பா்களான இவா்கள் வெள்ளிக்கிழமை மாலையில் குட்டைக்கோடு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற ஓணவிழாவில் பங்கேற்றுவிட்டு, மேல்புறம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, மேல்பாலையிலிருந்து குட்டைக்கோட்டுக்கு மரப் பாரம் ஏற்றி வந்த லாரியும், இவா்களது பைக்கும் மோதிக் கொண்டனவாம். இதில், சம்பவ இடத்திலேயே பபின் ஜோவும், அகிலும் உயிரிழந்தனா்.இத்தகவலறிந்த அருமனை போலீஸாா், அவா்களது சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.