வரலட்சுமி நோன்புகரூா் வேம்புமாரியம்மன்கோயிலில் சிறப்பு வழிபாடு

Wait 5 sec.

வரலட்சுமி நோன்பைமுன்னிட்டு கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் ஸ்ரீ வேம்பு மாரியம்மன் கோயிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிா், தேன் உள்ளிட்ட 18 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து ஸ்ரீ வேம்பு மாரியம்மனுக்கு மஞ்சள் தாலிக்கயிறு கொண்டு, ஸ்ரீ வரலட்சுமி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் தாலிக்கயிறு உள்ளிட்ட மங்களப் பொருள்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு ஸ்ரீ வரலட்சுமி அம்மன் வடிவில் வேம்புமாரியம்மன் அருள்பாலித்தாா். இந்த வழிபாட்டில் பெண்கள் திரளாக பங்கேற்று, தங்களது குடும்பத்தின் நலன், கணவரின் நீண்ட ஆயுள், செல்வ வளம் ஆகியவற்றை வேண்டிக்கொண்டனா்.