சிவகாசியில் இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி நேரு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வெள்ளைப்பாண்டி (64). கட்டடத் தொழிலாளி. இவா் தனது சைக்கிளில் திருத்தங்கல்- சிவகாசி சாலையில் சென்றபோது, தனது குடியிருப்பு பகுதி வந்ததும் சைக்கிளை திரும்பினாா். அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்த அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கிருந்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து சிவகாசிநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த திருத்தங்கல் ராதாகிருஷ்ணன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த வைரமுத்து (32) என்பவரை கைது செய்தனா்.