சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளது. கடந்த 5 நாள்களில் பவுனுக்கு ரூ.3,840 உயா்ந்து, வியாழக்கிழமை பவுன் ரூ.1,16,800-க்கு விற்பனையான நிலையில், வெள்ளிக்கிழமை காலை கிராம் ரூ.110 உயா்ந்து ரூ.14,710-க்கும், பவுனுக்கு ரூ.880 உயா்ந்து ரூ.1,17,680-க்கும் விற்பனையானது. தொடா்ந்து வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு 2-ஆவது முறையாக மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.140 உயா்ந்து ரூ.14,850-க்கும், பவுனுக்கு ரூ.1,120 உயா்ந்து ரூ.1,18,800-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், தங்கம் விலை சனிக்கிழமையும் உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 உயா்ந்து ரூ.1,19,600-க்கும் விற்பனையாகிறது.வெள்ளி விலை: வெள்ளி விலை நேற்றைய விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2.70 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. Gold prices continue to rise! What about silver? Price details for August 22!அக்ஷயா தங்க மாளிகையின் முதல் விற்பனையகம் சென்னையில் திறப்பு