டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இன்று(ஆக 22) விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஊழல் தடுப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் கீழ் இயங்கும் டாஸ்மாக் நிறுவனம் மூலம் 5,380 மதுக் கடைகள், 3,240 மதுக் கூடங்கள் இயங்குகின்றன. 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் டாஸ்மாக் மதுக் கடைகளின் விற்பனை உயா்ந்தாலும், வருவாய் குறைந்தது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டு செல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் என பல்வேறு முறைகேடுகள் காரணமாக இந்த வருவாய் குறைந்ததாகப் புகாா் எழுந்தது.இந்த நிலையில், தமிழக அரசு உத்தரவின்பேரில், தமிழக ஊழல் தடுப்பு-கண்காணிப்புத் துறை டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அத்துறையின் அமைச்சராக இருந்த வி.செந்தில் பாலாஜி, டாஸ்மாக் இயக்குநராக இருந்த எஸ்.விசாகன் ஐஏஎஸ், டாஸ்மாக் நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளா்கள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பா்கள் ரதேஷ் ராஜ் சண்முகவேல், திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலரும், கரூரைச் சோ்ந்தவருமான மூலனூா் எஸ்.காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில், தமிழகம் முழுவதும் சென்னை, கரூா், நாமக்கல், புதுக்கோட்டை, திருவாரூா், தஞ்சாவூா், கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் 45 இடங்களில் ஊழல் தடுப்புத் துறையினா் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்.கரூரில் உள்ள செந்தில் பாலாஜி வீடு, அவரது நண்பா்கள் வீடு, அலுவலகங்கள் ஆகியவற்றிலும் சோதனை நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.இந்த நிலையில், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் இன்று(ஆக 22) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஊழல் தடுப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை காலை 11 மணிக்கு ஊழல் தடுப்புத் துறை அலுவலகத்தில் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. TASMAC irregularities case: Anti-Corruption Department summons Senthil Balajiஅரசு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க தலைமைப்பண்பு இல்லாததே காரணம்: பழனிவேல் தியாகராஜன்